யாழ்.நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பயணத்தடையை மீறுவோரை கண்காணிக்க பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரம் மற்றும் நகரை அண்டிய பகுதிகளில் பயணத்தடையை மீறுவோரை கண்காணிக்க பொலிஸார் சிறப்பு நடவடிக்கை..

யாழ்.மாவட்டத்தில் பயணத்தடையை மீறி வீதிகளில் நடமாடுவோரை கண்காணிக்க பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையினை இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர். 

யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையிலான யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மோட்டார் சைக்கிள் போலீஸ் அணியினரால் யாழ் நகரப் பகுதிகளில் விசேட ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

குடா நாட்டின் முக்கிய வீதிகளில் பொலிசாரினால் குறித்த ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறதுயாழ்ப்பாண குடாநாட்டில் அண்மையில் பயணத் தடை அமுலில் உள்ள வேளையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் 

வீதியில் பயணிக்கும் சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் பொலிசாரினால் சோதனை இடப்படுகின்றது. அத்தியாவசிய சேவை ஈடுபடுவோர் மாத்திரம் பயணத் தடை வேளையில் வீதியில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில். 

தேவையற்ற விதத்தில் வீதிகளில் நடமாடுவோர்எச்சரிக்கை செய்து வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு