வயல் நிலத்தில் திடீரென உருவான பெரும்பள்ளம்!! -அச்சத்தில் விவசாயிகள்-
மெக்ஸிகோவின் பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா எனும் பகுதியில் இடத்தில் உள்ள வயலில் திடீரென நிலம் உள்வாங்கியதில் அங்கு பெரும் பள்ளம் உருவானது.
திடீரென சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட குறித்த பள்ளத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் அப்பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
பள்ளம் ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் பெரும் இடி இடித்தது போன்ற சப்தம் கேட்டதாக விளைநிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்திற்கு கீழே பாறைகள் குறைவாக இருப்பதாலும், திடீரென ஏற்பட்ட நீரோட்டம் காரணமாகவும் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.