யாழ்.இணுவில் - கலாஜோதி கிராமத்தை முடக்குமாறு சுகாதார பிரிவு பரிந்துரை..! அனுமதி கிடைத்ததும் முடக்கப்படும்..

ஆசிரியர் - Editor I
யாழ்.இணுவில் - கலாஜோதி கிராமத்தை முடக்குமாறு சுகாதார பிரிவு பரிந்துரை..! அனுமதி கிடைத்ததும் முடக்கப்படும்..

யாழ்.இணுவில் ஜே/190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவை முடக்குமாறு சுகாதார பிரிவினால் யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

யாழ்.மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங் காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் 

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இணுவில்  ஜே/190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுதன் காரணமாக 

கிராமத்தின் ஒரு பகுதியினை தனிமைப் படுத்துமாறு சுகாதாரப் பிரிவினரால் யாழ்.மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியிடம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இணுவில் கிராமத்தின் ஒரு பகுதியில் பல தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியினை முடக்குவதற்கு அனுமதிகோரி 

சுகாதாரப் பிரிவினரால் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு