SuperTopAds

சிகிச்சையில் பெற்று வந்த கொரோனா நோயாளி மரணம்!! -ஆத்திரத்தில் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியரை தாக்கிய கும்பல்-

ஆசிரியர் - Editor II
சிகிச்சையில் பெற்று வந்த கொரோனா நோயாளி மரணம்!! -ஆத்திரத்தில் வைத்தியசாலைக்குள் புகுந்து வைத்தியரை தாக்கிய கும்பல்-

இந்தியாவின் அசாம் மாநிலம் ஹோஜாய் நகரில் உள்ள உதலி மாடல் வைத்தியசாலையில் கொரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் ஆத்திரத்தில் வைத்தியசாலையை அடித்து நெருக்கியுள்ளனர். இதனால் வைத்தியசாலையில் உள்ள ஊழியர்கள் அவசரம் அவசரமாக வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர். 

வைத்தியர் சேனாபதி ஒரு அறைக்குள் சென்று பூட்டிக்கொண்டார். ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து வைத்தியரை கொடூரமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த வைத்தியர் அருகில் உள்ள வேறு ஒரு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

வைத்தியர் சேனாபதி தாக்கப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.