தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் இல்லை!! -அரச ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
தடுப்பூசி போடாவிட்டால் சம்பளம் இல்லை!! -அரச ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு-

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. எனினும் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். 

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்வதற்காக உத்தர பிரதேச மாநிலம், பிரோசாபாத் மாவட்ட ஆட்சியாளர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.