SuperTopAds

மோடியிடம் 6 வயது சிறுமி கொடுத்த முறைப்பாடு!! -இணைய வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு-

ஆசிரியர் - Editor II
மோடியிடம் 6 வயது சிறுமி கொடுத்த முறைப்பாடு!! -இணைய வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு-

பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி முறைப்பாடு கொடுத்ததன் அடிப்படையில் அங்கு இணைய வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கல்வி முறையில் பெரிய அளவில் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் நேரடி கல்வி முறைக்கு முட்டுக்கட்டை விழுந்த சூழலில், உலகெங்கிலும் இணையவழி கல்விமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் காஸ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேரம் இணைய வகுப்புகள் நடப்பதாகவும், குழந்தைகளுக்கு அதிக வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் வீடியோ மூலம் முறைப்பாடு கொடுத்திருந்தார். 

இணைய வகுப்புகளால் ஒவ்வொரு நாளும் தான் எதிர்கொள்ளும் மன அழுத்தம் குறித்து தனக்கே உரித்தான மழலை பாணியில் கொஞ்சும் குரலில் கைகளை அசைத்தபடி சிறுமி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணைய வகுப்பு குறித்து பிரதமர் மோடியிடம் 6 வயது சிறுமி முறைப்பாடு கொடுத்ததன் அடிப்படையில் அங்கு இணைய வகுப்புகளுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநில நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், தொடக்கக்கல்விக்கு முந்தைய வகுப்பு மாணவர்களுக்கு தினமும் அரை மணி நேரமும், தொடக்க மற்றும் நடுநிலைப் பாடசாலை மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரத்துக்கு மிகாமலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.