ஒன்லைன் மதுவிற்பனைக்கு அனுமதி!! -இனி வீடுகளுக்கே தேடிவரும் மதுபானங்கள்-
டெல்லியில் இணைய வழியாக முற்பதிவு செய்து தேவையான மதுபானங்களை அவரவர் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அங்கு கொரோனா தொற்று பாதிப்பு உயர்தால் ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகளை முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு அமல்படுத்தியது. இருப்பினும் மருந்தகங்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட சேவைகளுக்கு மட்டுமே விலக்களிக்கப்பட்டது.
மேலும் மதுபான விற்பனைக்கும் அரசு தற்காலிக தடை விதித்தது. இதனால், மதுபானங்கள் கிடைக்காமல் மதுபிரியர்கள் அவதியடைந்தனர்.
இதனால் அவர்களை திருப்திப்படுத்துவதற்காக டெல்லி அரசு இணைய வழி மதுவிற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மதுபானம் வாங்க விரும்புவோர் வீட்டில் இருந்தபடியே, தங்களுடைய கைபேசியில் அதற்கான செயலியை கொண்டு அல்லது இணையதளம் வழியே மதுபானம் முற்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இருப்பினும் வீடுகளை தவிர, விடுதிகள், அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு மதுபான வினியோகம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என்றும் டெல்லி அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.