ஒரு வீட்டில் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம்!! -அனுமதி வழங்கிய சீனா அரசு-
சீனா நாட்டில் திருமணமான தம்பதிகள், 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள 40 வருடங்களின் பின் அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அந்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வீட்டுக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. அங்கு வயதானவர்கள் அதிகமாகி, உழைக்கும் மக்கள் தொகை குறைந்ததால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக 2016 ஆம் ஆண்டு இந்த விதிகள் தளர்த்தப்பட்டு, ஒரு வீட்டில் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியது.
இதனால் வருடாந்த குழந்தை பிறப்பு ஒரு கோடியே 20 இலட்சம் என்ற மிகக் குறைவான நிலையை எட்டியிருக்கிறது. இதனால் குழந்தை பிறப்பு கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ள சீனா, இனிவரும் காலங்களில் வீட்டிற்கு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதற்கு சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.