தமிழகத்தில் மே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 10,186 பேர் பலி!! -மொத்த உயிரிழப்பு 24,232 ஆக உயர்வு-
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு இதுவரை தொற்றால் இதுவரை 24,232 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு மே மாத ஆரம்பத்தில் இருந்தே கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் ருத்ர தாண்டவம் ஆடியது.
இதன்படி கடந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து 7 ஆம் திகதி வரை தினசரி உயிரிழப்பு 200ற்க்கு கீழ் இருந்ததது. 8 ஆம் திகதியில் இருந்து 14 ஆம் திகதி வரை 200இல் இருந்து 300ற்க்குள் இருந்தது.
15 ஆம் திகதியில் இருந்து 20 ஆம் திகதி வரை 300 இல் இருந்து 400ற்க்குள் இருந்தது. 21 ஆம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரை 400ற்க்குள் மேல் பதிவாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் 11,66,756 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 20,96,516 ஆக உயர்ந்துள்ளது.