மீண்டும் தொடங்கும் ஜ.பி.எல்!! -மேற்கிந்தியதீவு அணி வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை-

ஆசிரியர் - Editor II
மீண்டும் தொடங்கும் ஜ.பி.எல்!! -மேற்கிந்தியதீவு அணி வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை-

ஐ.பி.எல் மிகுதி போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தினத்தில் மேற்கிந்தியதீவுகள் கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டி (சி.பி.எல்.) நடைபெறுகிறது. 

இதனால் மேற்கிந்தியதீவுகள் அணி வீரர்கள் ஐ.பி.எல் மிகுதி போட்டிகளில் பங்கேற்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரிபீயன் ‘லீக்’ போட்டி ஆகஸ்டு 28 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. செப்டம்பர் 19 ஆம் திகதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடி விட்டு மேற்கிந்தியதீவுகள் அணி வீரர்கள் ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைய வேண்டும். இதனால் ஒரு சில ஆட்டங்களை விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டியை முன்கூட்டியே தொடங்க கோரி மேற்கிந்தியதீவுகள்; கிரிக்கெட் வாரியத்துடன் பி.சி.சி.ஐ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Radio