ஐ.பி.எல் மிகு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில்!! -செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 வரை நடத்த முடிவு-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் மிகு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில்!! -செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 10 வரை நடத்த முடிவு-

ஐ.பி.எல் மிகுதி போட்டிகள் செப்டம்பர் 18 ஆம் திகதி அக்டோபர் 10 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

14 ஆவது ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் போட்டிகளை கால வரையின்றி தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஏற்பட்டது.

29 போட்டிகள் முடிந்த நிலையில் மிகுதி 31 போட்டிகளை நடத்திவிட வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ. தீவிரமாக உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்த போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி ஐ.பி.எல் தொடரின் மிகுதி போட்டிகளை செப்டம்பர் 18 ஆம் திகதி முதல் அக்டோபர் 10 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படுகிறது.


Radio