சீனாவில் திடீரென பரவிய கொரோனா!! -முக்கிய நகரத்தை முழுமையாக முடியது அரசு-
சீனா நாட்டின் கங்சோ மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம் ஒன்று கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா கொரோனா தொற்றிலிருந்து படிப்படியாக மீண்டு கொண்டிருக்கும் நிலையில் ஹாங்காங்கின் வடக்குப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த கங்சோ பகுதியில் வைரஸ் தாக்கம் அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்பகுதியில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அண்மையில் இந்த பகுதியில் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்ட போது புதிதாக 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அந்த மாகாணத்தின் சுகாதாரத் துறையால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாகாணத்தில் இருந்து மற்ற மாகாணங்களுக்கு வைரஸ் பரவாமல் தடுக்க சீன கம்யூனிச அரசு இந்த மாகாணத்தில் இருந்து வெளியேறும் அனைத்து வழிகளையும் மூடியுள்ளது.