கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 இலட்சம் வைப்பீடு!! -முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 இலட்சம் வைப்பீடு!! -முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு-

கொரோனா வைரஸ் தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா 5 இலட்சம் ரூபா வைப்புத்தொகையாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அந்தக் குழந்தைக்கு 18 வயது நிறைவடையும்போது வழங்கப்படும் என்றும், அக்குழந்தைகளின் பட்டப் படிப்பு வரையிலான கல்வி, விடுதிக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் மேலும் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் இன்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளார்.