யாஸ் புயலின் தாக்கத்தால் விடாது பெய்யும் அடை மழை!! -வெள்ளத்தில் மூழ்கி தத்தளிக்கும் பல நகரங்கள்-
இந்தியாவின் ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட வங்கக்கடலை அண்மித்த மாநிலங்களை உலுக்கிய யாஸ் புயல் வலுவிழந்து ஜார்க்கண்டை நோக்கி நகர்ந்த போதும் கொல்கத்தாவில் கடும் மழை பெய்து வருகிறது.
இதே போன்று ராஞ்சியிலும் பீகாரின் முசாபர்புர் நகரிலும் பலத்த காற்றுடன் கன மழை பொழிந்தது. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்ததால் இய்லபு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டதால் உயிர்ச்சேதம் மிகக்குறைந்த அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. 15 ஆயிரம் கோடி பெறுதியான உடமைகளுக்கு இதன் போது சேதம் ஏற்பட்டிருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார்.