SuperTopAds

வங்காளதேச பெண்ணை இந்தியாவுக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை!!

ஆசிரியர் - Editor II
வங்காளதேச பெண்ணை இந்தியாவுக்கு கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை!!

பணத்தகராற்றில் வங்காளதேச பெண்ணை இந்தியாவுக்கு கடத்திவந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பில் இரு பெண் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ராமமூர்த்தி பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையின் போது பொலிஸாருக்கு கிடைத்த வீடியோவின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையிலும் இரு பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுவரை கிடைத்த தகவலின்படி, 6 பேரும் வங்காளதேசத்தில் இருந்த ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணும் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்.

பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் அந்த பெண்ணை அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தி வந்து, கொடுமைப்படுத்தி, அடித்து உதைத்து உள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.