பேரறிவாளன் விடுதலை!! -முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை-
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளாக சிறையிலுள்ள பேரறிவாளன் தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு அமைவாக 30 நாள் பரோலில் இன்று வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளனை பரோலில் விடுவிக்குமாறு அவரது தாயார் அற்புதம்மாள் விடுத்து கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனை 30 நாள் பரோலில் விடுவிக்க சில நாட்களுக்கு முன்னதாக உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனை 30 நாள் பரோலில் பொலிசார் விடுவித்தனர்.
இதையடுத்து புழல் சிறையில் இருந்து ஜோலார்பேட்டை இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளன் அழைத்து செல்லப்படுகிறார்.