இந்தியாவில் 11717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு!!

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் 11717 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு!!

இந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா நோயாளிகளுக்கு இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. 

கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்த நிலையில், பல்வேறு மாநிலங்கள் இந்த நோயை தொற்றுநோயாக அறிவித்து நடவடிக்கை எடுத்துவருகின்றன.

இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் இதுவரை 11717 பேருக்கு இந்த நோய் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அதிக அளவாக 2859 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து மகாராஸ்டிராவில் 1770 பேருக்கும், ஆந்திராவில் 768 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.