யாஸ் புயல் கரையை கடந்தது!! -கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பு: 3 இலட்சம் வீடுகள் சேதம்-

ஆசிரியர் - Editor II
யாஸ் புயல் கரையை கடந்தது!! -கடலோர மாவட்டங்கள் கடும் பாதிப்பு: 3 இலட்சம் வீடுகள் சேதம்-

ஒடிசா- மேற்கு வங்காளத்தின் 10 க்கும் மேற்பட்ட கடலோர மாவட்டங்கள் ஊடாக யாஸ் புயல் கரையை கடந்ததினால் அப்பகுதிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. 

வங்க கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா எல்லையில் பாலசோருக்கு 20 கிலோ மீட்டருக்கு தெற்கே இன்று கரை கடந்தது. புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. 

மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்கிறது.  கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அங்கு 3 இலட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.