SuperTopAds

இந்தியாவில் வீணாக்கப்படும் தடுப்பூசிகள்!! -தமிழகத்திற்கு 3 ஆவது இடம்-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் வீணாக்கப்படும் தடுப்பூசிகள்!! -தமிழகத்திற்கு 3 ஆவது இடம்-

இந்தியாவில் கொரோனாவின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் 5 மாநிலங்கள் தடுப்பூசிகளை வீணாக்குவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என கருதப்படும் நிலையில், இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், தேசிய சராசரிக்கு மேலாக அதிக தடுப்பூசிகளைப் பல மாநிலங்கள் வீணாக்குவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை, அதில் முதல் ஐந்து மாநிலங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது.

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் முதல் இடத்தில் ஜார்கண்ட், இரண்டாவது இடத்தில் சத்தீஸ்கார், மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளது. 

தடுப்பூசி வீணாகும் சதவீதத்தை ஒரு சதவீதத்திற்கு கீழாக வைத்திருக்கும்படி மாநிலங்கள் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்படுவதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.