SuperTopAds

ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியானது-அம்பாறை காரைதீவு ஒருகுடும்பத்தை சேர்ந்தவர்கள்

ஆசிரியர் - Editor III
ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியானது-அம்பாறை காரைதீவு ஒருகுடும்பத்தை சேர்ந்தவர்கள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொரோனா தொற்றாளார்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

 காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேற்று(23) இரவு  தொற்று உறுதிசெய்யப்பட்டது எனவும்  இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய ஒருவருக்கு கடந்த சனிக்கிழமை(22) அன்று  கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டத்தை அடுத்து  அவரது குடும்பத்தினரிடையே  மேற்கொண்ட பரிசோதனையில் அவரின் மனைவிஇ பிள்ளைகள் உள்ளடங்கலாக  நால்வருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அதனை தொடர்ந்து அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த சுமார் 52 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எவருக்கும் இதுவரை  தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

 மேலும் மரண வீடுகளில் அவசரமாக சடங்குகளை முடிக்கவேண்டும் அல்லது  தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அல்லது கொரோனா தொடர்பான அச்சம் இருந்தால் உடனடியாக எங்களை தொடர்புகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும்  அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்தியத்தில் தற்போது கொரோனாவின் 3 ஆவது அலையின் தாக்கம் மக்களின் சுகாதார நடைமுறையற்ற செயற்பாட்டினால் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.