எந்த தொல்லையும் கொடுக்கவில்லை!! ஸ்ரேயாவின் மறுபக்கம் தொடர்பில் மனம் திறக்கும் இயக்குணர்-
எனக்கு ஸ்ரேயா எந்த தொல்லையும் கொடுக்கவில்லை என்று இயக்குணர் மாதேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது ‘சண்டக்காரி’ படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த படத்தில், ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இயக்குணர் மாதேஸ் பங்கு கொண்ட நேர்காணல் ஒன்றில் பொதுவாக மும்பை நடிகை என்றாலே படப்பிடிப்புக்கு தாமதமாக வருவார்கள். உங்கள் படத்தில் ஸ்ரேயா எப்படி? என கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
மும்பை கதாநாயகிகள் என்றாலே பந்தா பண்ணுவார்கள். தாமதமாக வருவார்கள். பாதுகாப்பு படையுடன் வருவார்கள் என்று அறிந்திருக்கின்றேன். என் கதைக்கு ஸ்ரேயா பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்ய சென்றேன்.
மதனதில் பயம் இருந்தது. ஆனால் நான் பயப்பட்டத போன்று ஸ்ரேயா இல்லை. பந்தாவும் இல்லை. பாதுகாப்பு படையும் கேட்கவில்லை.
சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து விடுவார். எந்த தொல்லையும் கிடையாது. அவருக்கு படப்பிடிப்பு முடிந்து விட்டாலும், அவ்விடத்தை விட்டுப்போகமாட்டார். எனைய நடிகர்கள் நடிப்பதை பார்த்துக்கொண்டிருப்பார் என்றார்.