SuperTopAds

ராஜீவ் கொலை குற்றவாளிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்!! -முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசம்-

ஆசிரியர் - Editor II
ராஜீவ் கொலை குற்றவாளிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்!! -முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆவேசம்-

ராஜீவ் கொலை குற்றவாளிகளை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அப்பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 

ராஜீவ் காந்தியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இப்போது அவர்கள் சிறையில் உள்ள அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம் என சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பெருந்தன்மையோடு தெரிவித்துள்ளனர். 

ஆனால், ராஜீவ் காந்தியின் இழப்பு நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பு. அவரை கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. அது சில அரசியல் கட்சி மற்றும் பொது நலவாதிகளின் கருத்தாக இருக்கலாம்.

ஆனால், காங், தொண்டன் என்ற முறையில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தாக வேண்டும். அவர்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். இது மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றார்.