திடீரென ஏற்பட்ட உறைபனிக் காலநிலை!! -சீனாவில் மாரத்தான் ஒட்டப் போட்டியில் பங்கேற்ற 21 பேர் பலி-
சீனா நாட்டின் கன்சூ மாகாணத்தில் பேயின் நகரின் சுற்றுலா தலத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 100 கி.மீ தூர மலையோர மாரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்ற 21 ஓட்ட வீரர்கள் அங்கு திடீரென மாறிய மோசமான காலநிலையால் உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த 18 ஓட்ட வீரர்களின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டன. காணாமல் போன 3 பேரை தோடும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீளவும் ஆரம்பமான நிலையில் அவர்கள் மூவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் 172 ஓட்ட வீரர்கள் பங்கு கொண்டனர். இந்நிலையில், அங்கு திடீரென கடும் உறைபனி ஏற்பட்டு வெப்பநிலை மோசமாகக் குறைந்ததால் போட்டியாளர்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டது. திடீரென மோசமான காலநிலையை சமாளிக்க முடியாது 21 பேர் உயிரிழந்தனர்.
மாரத்தான் ஓட்ட போட்டியில் பங்கேற்றவர்களில் 151 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 5 பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.