வீடு, வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி!! -மு.க.ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்-
மாற்றுத்திறனாளின் சிரமத்தை தவிர்ப்பதற்காக அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் இன்று காலை ஆரம்பித்து வைத்தார். மாநகராட்சி மருத்துவ ஊழியர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடுவார்கள். இந்த திட்டத்துக்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.