SuperTopAds

120 வயதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி!!

ஆசிரியர் - Editor II
120 வயதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட மூதாட்டி!!

ஜம்மு-காஸ்மீரில் தனது 120 வயதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிரக் கூடாது என்று தடுப்பூசி போட்டுக்கொண்ட பாட்டி ஒருவர் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.

உதம்பூர் மாவட்டம் கதியாஸ் என்ற கிராமத்தில் வசிக்கும் தோலி தேவி என்ற மூதாட்டிக்கு 120 வயதாகிறது. இந்த தள்ளாத வயதிலும் சுறுசுறுப்புடன் இருக்கும் அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

தடுப்பூசி போட்டதால் தனக்கு எந்த பிரச்சனையும் வரவில்லை, அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மூதாட்டி உற்சாகமாக கூறினார்.