அண்டார்டிகாவில் இருந்து உடைந்து கடலுக்குள் சென்ற ராட்சத பனிப்பாறை!! -நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியதாம்-

தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகாவில் இருந்து மிகப் பெரிய பனிப்பாறை ஒன்று பிரிந்து கடலுக்குள் சென்றுள்ளது.
அந்த பனிப்பாறை அமெரிக்காவின் நியூயார்க் நகரின் பரப்பளவு 1,213 சதுர கி.மீ ஆகும். இதன்படி இந்த ஏ-76 பனிப்பாறையானது பரப்பளவில் அமெரிக்காவின் நியூயார்க் நகரை விட 4 மடங்கு பெரியது ஆகும்.
உலகில் தற்போது நிலவி வரும் புவி வெப்பம் காரணமாக பூமியின் தெற்கு முனையைச் சேர்ந்த இந்த குளிர்ப் பிரதேசமான அண்டார்டிகாவில் பனிப்பாறைகளும், பனி மலைகளும் நாள்தோறும் உருகத் தொடங்கியிருக்கின்றன.
இதன் காரணமாக கடல் மட்டம் உயரும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்களும், சமூக ஆர்வலர்களும் மிக நீண்ட காலமாகவே உலக நாடுகளை எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்டார்டிகா கண்டத்தில் இருந்து தற்போது ஒரு பிரம்மாண்டமான பனிப்பாறை தனியாக பிரிந்து சென்றுள்ளது. இந்த பனிப்பாறை 4,320 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது என்றும் 175 கி.மீ. நீளமும், 25 கி.மீ. அகலமும் கொண்டது என்றும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோப்பர்நிகஸ் செண்டினல்-1 என்ற செயற்கைகோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களின் மூலம், இந்த தகவல் உறுப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த பனிப்பாறைக்கு ஏ-76 (யு-76) என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். பூமியில் தற்போது உள்ள பனிப்பாறைகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று கூறப்படுகிறது.