பிறக்கும் குழந்தைகளுக்கும் கொரோனா அறிகுறி!! -அதிர்ச்சி தகவல் வெளியிட்ட மருத்துவர்கள்-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி தாய்மார்கள் பெற்றெடுக்கும் பல குழந்தைகளுக்கு தொற்று அறிகுறி இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
கடந்த சில நாட்களில் 0-12 வயதுடைய 1,000 முதல் 1,300 குழந்தைகளுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நோய் தொற்றுடைய தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளில் சிலருக்கும் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதனால் குழந்தைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகாமல் இருப்பது ஆறுதல் அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள். ஆனால் முதல் அலையின் போது கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகள் அறிகுறி இல்லாமலேயே பிறந்தனர்.
ஆனால் 2 ஆவது அலையில் கடந்த சில நாட்களில் பிறந்த பல குழந்தைகள் தொற்று கரரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுடன் நிமோனியா தாக்கிய குழந்தைக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.