SuperTopAds

கொரோனாவால் 1,118 வைத்தியர்கள் பலி!! -இந்தியாவில் மோசமடையும் நிலவரம்-

ஆசிரியர் - Editor II
கொரோனாவால் 1,118 வைத்தியர்கள் பலி!! -இந்தியாவில் மோசமடையும் நிலவரம்-

இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிற நிலையில் உயிரிழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் முன்கள பணியாளர்களான வைத்தியர்கள், தாதியர்கள் போன்றோரும் இந்த தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்து வருகிறார்கள்.

2 ஆவது அலையில் இதுவரை 270 வைத்தியர்கள் பலியாகி விட்டனர். இதில் முன்னாள் இந்திய மருத்துவ கழக தலைவர் வைத்தியர் கே.கே.அகர்வாலும் அடங்குவார். இதில் பீகாரில் அதிகபட்சமாக 78 வைத்தியர்களும், உத்தரபிரதேசத்தில் 37 பேரும், டெல்லியில் 29 பேரும், ஆந்திராவில் 22 பேரும் பலியாகி உள்ளார்கள்.

கொரோனா முதல் அலை தாக்கத்தில் நாடு முழுவதும் 748 வைத்தியர்கள் உயிரிழந்த நிiலியல் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 1118 வைத்தியர்கள் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.