SuperTopAds

பொதுச்சந்தையில் வெற்றிலைக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! 32 கடைகள் முடக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
பொதுச்சந்தையில் வெற்றிலைக்கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி..! 32 கடைகள் முடக்கப்பட்டது..

கிளிநொச்சி பொதுச்சந்தையில் வெற்றிலை கடை உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சந்தையில் உள்ள வெற்றிலை கடைகள் அனைத்தும் மூடக்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கட்டட தொகுதியில் காணப்பட்ட 32 கடைகளில் 25 வெற்றிலை கடைகளும் 7 தேங்காய் கடைகளும் உள்ளடங்குகின்றது. 

குறிதத் கடை உரிமையாளர் 6 நாட்கள் கடைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், இன்றைய தினம் கடைக்கு வருகை தந்தபோது அவருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் சந்தையிலுள்ள ஏனை கடைகளின் செயற்பாடுகள் வழக்கம்போல் இடம்பெறும் என தவிசாளர் தெரிவித்தார். குறித்த தொற்றின் பின்னரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் சுகாதார தரப்பினர் ஆராய்ந்து வருகின்றனர். 

கொத்தணி உருவாகும் சாத்தியங்கள் காணப்படும் பட்சத்தில் குறித்த சேவை சந்தை முடக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.