SuperTopAds

மரண சடங்கில் உறவினர்கள்போல் பாசாங்கு செய்து கொள்ளை..! 5 நாட்களின் பின் கணவன், மனைவி கைது..

ஆசிரியர் - Editor I
மரண சடங்கில் உறவினர்கள்போல் பாசாங்கு செய்து கொள்ளை..! 5 நாட்களின் பின் கணவன், மனைவி கைது..

கிளிநொச்சி - தர்மபுரம் கண்ணகிநகர் கிராமத்தில் கடந்த 13ம் திகதி மரண சடங்கில் உறவினர் போல பாசாங்கு செய்த கணவன், மனைவி வீட்டிலிருந்த 5 லட்சம் பணம் மற்றும் தங்க சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

மரண சடங்கு நிறைவடைந்த பின்னர் பணம் மற்றும் நகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவை இல்லாத நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில்

விசாரணைகளை மேற்கொண்டிருந்த பொலிஸார் சி.சி.ரி.வி கமரா உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் கண்டுள்ளதுடன் இன்றைய தினம் கணவன், மனைவியை கைது செய்திருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியிருக்கின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களுக்கு 6வயதில் ஒருபெண்குழந்தையும் உள்ளது தற்பொழுது இக் குழந்தை நிற்கதியாகியுள்ளது.