24 வயது இரட்டை சகோதரர்களை பலியெடுத்த கொரோனா!! -ஒரே நாளில் இருவரும் இறந்ததால் பெரும் சோகம்-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ரேமண்ட் ரபேல் - சோஜா தம்பதிக்கு 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது.
ஜோப்ரெட் வர்கீஸ் கிரிகோரி மற்றும் ரால்பிரட் ஜார்ஜ் கிரிகோரி என பெயர் கொண்ட அந்த சகோதரர்கள் இருவரும் ஒரே மாதிரியாக கணினி பொறியியல் படித்து, ஐதராபாத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி ஒரே நாளில் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டையர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.