திடீரென கவர்ச்சிக்கு மாறிய கீர்த்தி சுரேஸ்!! -படுக்கையறை காட்சியிலும் நெருக்கமான நடிப்பு-
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஸ் திடீரென கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
கீர்த்தி சுரேஸ் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே வந்தார்.
அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார். இந்நிலையில் அவர் நடிப்பில் இறுதியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார்.
படுக்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.