SuperTopAds

வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிரம்பியது!! -மரத்தின் கீழ் ஓய்வெடுக்கும் நோயாளிகள்-

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிரம்பியது!! -மரத்தின் கீழ் ஓய்வெடுக்கும் நோயாளிகள்-

கொரோனா சிகிச்சை மையம் இல்லாததால் எந்தவித மருத்துவ உதவிகளும் இல்லாமல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மரத்தின் கீழ் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இதனால், அங்கு உள்ள வைத்தியசாலைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா சிகிச்சை நிலையம் இல்லாததாலும், வைத்தியசாலைகளுக்குச் சென்று சிகிச்சை பெற பண வசதி இல்லாததாலும் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டோர் வேப்பமர நிழலில் ஓய்வெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.