SuperTopAds

புதிய நடைமுறையை கடைப்பிடிக்க தவறிய மக்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைப்பு

ஆசிரியர் - Editor III
புதிய நடைமுறையை கடைப்பிடிக்க தவறிய மக்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைப்பு

நாடளாவிய ரீதியில் கடந்த 3 தினங்களாக அமுலில் இருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (17) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ள நிலையில் இப்புதிய நடைமுறையை கடைப்பிடிக்க தவறிய மக்கள் வீடுகளுக்கு திருப்பி பொலிஸாரினால் அனுப்பப்பட்டுள்ளனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, மருதமுனை ,கல்முனை ,பாண்டிருப்பு ,நற்பிட்டிமுனை ,சேனைக்குடியிருப்பு ,நாவிதன்வெளி, மத்தியமுகாம், சவளக்கடை, சம்மாந்துறை ,சொறிக்கல்முனை ,நிந்தவூர், அட்டாளைச்சேனை ,அட்டப்பளம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் போன்ற பகுதிகளில இடம்பெற்றுள்ளது.

மேலும் பொலிஸார்  இன்று (17) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் எனவும் அந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் ஒலிபெருக்கி வாயிலாக பொலிஸார் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை இன்று முதல் தேசிய அடையாள அட்டை நடைமுறையை பயன்படுத்தி வீட்டில் இருந்து அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்பவர்கள் அடையாள அட்டையில் இறுதி இலக்கம் ஒன்றை இலக்கங்களை கொண்டவர்கள் (1,3,5,7,9) வெளியில் செல்ல முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி இன்று (17) காலை முதல் அம்பாறை  உள்ளிட்ட கல்முனை  நகரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாள அட்டையில் இறுதி இலக்கத்தின்படி வெளியில் வர தவறுவோர் கடுமையான பரிசோதிக்கப்பட்டு வீடுகளுக்கு திருப்பியனுப்படுகின்றனர்.

மேலும் தனிப்பட்ட தேவை நிமிர்த்தம்  நகரங்களுக்கு வருகைத்தரும்   மக்கள் கட்டாயம் அடையாள அட்டையை அவதானித்து அதன்படி வருகைத்தருவதன் மூலம் அசௌகரியங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.இது தவிர அவசியமற்ற காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேறும் நபர்கள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது