யாழ்.மாநகரில் அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை பொலிஸாரால் கண்காணிப்பு..! தேவையற்ற நடமாட்டம் வேண்டாம்..

நாடு முழுவதும் கடந்த 3 நாட்கள் அமுலில் இருந்த பூரண பயண கட்டுப்பாட்டு நடைமுறை இன்று அதிகாலையுடன் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் யாழ்.மாவட்டத்தில் அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை இறுக்கமாக பின்பற்றப்படுகிறது.
யாழ்.மாநகரில் இன்று காலை நடமாடியவர்களிடம் பொலிஸார் அடையாள அட்டை சோதனை செய்துள்ளதுடன் தேவையற்று நடமாடியவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.