வடக்கில் மேலும் ஒரு கிராமம் இராணுவம் மற்றும் பொலிஸ் கண்காணிப்பில்..! 8 பேருக்கு தொற்று உறுதி..
கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றை தனிமைப்படுத்த சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.
நேற்றைய PCR முடிவுகளின் அடிப்படையில் தர்மபுரம் பிரிவில் 08 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 7ம் யூனிற் பகுதியில் 07 பேரும் 5ம் யூனிற் பகுதியில் 01 வரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் PCR பரிசோதனைகளின் பின்னரே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பகுத சுகாதார தரப்பினர் மற்றும் இராணுவத்தினரின் விசேட கண்காணிப்பின்
கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக மாவட்ட கொவிட் செயலணி தெரிவித்துள்ளது.
மேலதிக விடயங்கள் தொடர்பில் நாளை ஆராய்ந்து தீர்மானம் எட்டப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.