SuperTopAds

வைத்தியசாலை செல்ல பயம்: குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்!! -மரத்தில் பரன் அமைத்து விநோதமாக தன்னை தனிமைப்படுத்திய இளைஞர்-

ஆசிரியர் - Editor II
வைத்தியசாலை செல்ல பயம்: குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும்!! -மரத்தில் பரன் அமைத்து விநோதமாக தன்னை தனிமைப்படுத்திய இளைஞர்-

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவர் தனது வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சி வினோதமான முறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

இந்தியா தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் கொத்தனிகொண்டா கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 25) என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகள் ஏற்கனவே அதிகளவில் இருப்பதால் அங்கு செல்ல பயந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள சிவா முடிவு செய்தார்.

ஆனாலும் தனது வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சியுள்ளார். 

தன்னை எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்று ஆலோசனை சிந்தித்த அவர் அதற்கு தனது வீட்டின் முன்பு இருக்கும் உயரமான மரத்தை தேர்வு செய்தார். அந்த மரத்தின் மீது கட்டிலை கட்டி பரண் போல் அமைத்து சிவா அதில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அவருக்கு கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் மரத்தின் மேல் அனுப்பி வைக்கின்றனர். இரவு தூக்கமும் சிவாவுக்கு மரத்தின் மீதுதான். அவரின் இந்த வினோத செயல் புதிய வகையான தனிமைப்படுத்துதலை காட்டியுள்ளது.