SuperTopAds

தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னர் மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்

ஆசிரியர் - Editor III
தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னர் மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள்

அடிக்கடி தமிழ் முஸ்லீம் உறவை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னர் மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள். அதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனும் செய்துகொண்டிருக்கிறார் என உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் கல்முனையில் அமைந்துள்ள  உலமா கட்சி காரியாலயத்தில் நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு  தொடர்ந்தும்   கருத்து வெளியிட்ட அவர்

அடிக்கடி தமிழ் முஸ்லீம் உறவை வலியுறுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னர் மக்களை மூட்டிவிட்டு சண்டைக்கு இழுத்து விடுகிறார்கள். அதைத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கலையரசனும் செய்துகொண்டிருக்கிறார்அவர் கூறுவது போன்று அம்பாறை மாவட்டாத்தில் தமிழர்களின் நிலத்தை முஸ்லிங்கள் எங்கு கையகப்படுத்தியுள்ளார்கள் என்று அவரிடம் கேற்கிறேன். கொலோனி 12, 05 போன்றவற்றில் முஸ்லிங்களும் 7ஆம் கொலனி, வீரமுனை போன்ற பிரதேசங்களிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். இங்கு யாரும் யாருடைய நிலத்தையும் சுரண்டவில்லை. அடாத்தாக யாரையும் குடியெழுப்பவும் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை இலக்குவைத்து முன்வைக்கப்படும் பிரச்சாரங்களே இவையாகும்.

 அப்படி யாராவது செய்திருந்தால் அவர்களுடன் நல்ல உறவை பேணிக்கொண்டு சம்பந்தன் ஐயாவின் வீட்டில் புரியாணி சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாக உள்ள ரவூப் ஹக்கீம் அவர்களிடம் பேசி தீர்க்கலாம். முஸ்லிங்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதையும் பேசி சாதிக்கும் நிலையே இருக்கிறது. கிழக்கில் தமிழர்களும், முஸ்லிங்களும் சகோதரர்களாக வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையே சகோதரத்துவத்துடன் எழும் பிரச்சினைகளை தீர்த்துவைக்கவேண்டியது ஹக்கீமினதும், சம்பந்தனினதும் பொறுப்பாகும்.

காரைதீவு முச்சந்தியில் இருந்த பாபா தைக்காவில் நானறிந்த வகையில் பல தசாப்தங்களாக முஸ்லிங்கள் தங்கி  இளைப்பாறி, தொழுது சென்றிருக்கிறார்கள். கடந்த 1985 ஆம் ஆண்டு அந்த தைக்கா சிதைக்கப்பட்ட பின்னர் அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தைக்கவை இல்லாமலாக்கி விட்டார்கள். இது தொடர்பில் அதன் நிர்வாகம் இருந்த சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசலிடம் கேட்டால் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறுகிறார்கள். இது தொடர்பில் பல வருடங்களாக நாங்கள் பேசி வருகிறோம். தொல்பொருளியல் ரீதியாகவும்இ சமூகவியல் ரீதியாகவும் இதற்கான தடையங்கள் நிறைய உள்ளது. இந்த விடயத்தில் தமிழ், முஸ்லிம் எம்.பிக்கள்

தலையிட்டு தீர்வை பெற்றுத்தர வென்றும் என்று கேட்டுக்கொண்டார்.