இந்தியாவில் உயரும் கொரோனா உயிரிழப்பு!! -24 மணி நேரத்தில் 4,077 பேர் மரணம்-
இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை அடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3,11,170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 இலட்சத்து 11 ஆயிரத்து 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 46 இலட்சத்து 84 ஆயிரத்து 77 ஆக உயர்வடைந்து உள்ளது.
தொற்றுக்கு உள்ளான 4,077 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,70,284 ஆக உயர்ந்து உள்ளது.