யாழ்.அச்சுவேலியில் இராணுவத்தினர் சிறப்பு தொற்று நீக்கல் நடவடிக்கை..!

யாழ்.அச்சுவேலியில் இராணுவத்தினர் இன்று காலை கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கையினை முன்னெடுத்திருக்கின்றனர்.
யாழ்.மாவட்டத்தில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,
யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா வின் வழிகாட்டுதலில் ராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டுதலின் கீழ்
ராணுவத்தின் 521 ஆவது பிரிகேட் படைப்பிரிவினரால்அச்சுவேலி நகரப்பகுதி,சந்தை நீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டு கிருமி தொற்று நீக்கி மருந்து விசிறும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது
யாழ்.குடாநாட்டில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் முகமாக பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில்
இராணுவத்தினரால் கிருமித் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.