SuperTopAds

வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் மரணம்..

ஆசிரியர் - Editor I
வடக்கில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் மரணம்..

வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண்மணி நேற்றயதினம் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று பீடித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று மரணமடைந்துள்ளார்.