300 படுக்கைகளுடன் வடக்கில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை நிலையம்..! நாளை தொடக்கம் பணிகள் ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
300 படுக்கைகளுடன் வடக்கில் மேலும் ஒரு கொரோனா சிகிச்சை நிலையம்..! நாளை தொடக்கம் பணிகள் ஆரம்பம்..

முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையத்தில் நாளை முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. 

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தினால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 300 படுக்கை வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது. 

இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று முதல் பணிகளை ஆரம்பிக்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிகிச்சை நிலையமானது கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைவின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் உருவாக்கப்படவுள்ளதுடன், 

மாங்குளம் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்திய குழாம் சேவையில் ஈடுபடவுள்ளனர்.

முறிகண்டியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றே இவ்வாறு கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான பணிகளை கிளிநொச்சி இராணுவ தலைமையகம் மேற்கொண்டது. இதன் பணிகள் நிறைவுற்ற நிலையில் கிளிநொச்சி இராணுவ தலைமையக 

கட்டளை அதிகாரி மஜர் ஜெனரல் கரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் ஆகியோர் 

குறித்த வைத்தியசாலையை பார்வையிட்டதுடன், பணிகளை ஆரம்பித்தனர்.இதேவேளை அங்கு கடமையாற்றவுள்ள சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு