கொரோனா தடுப்பு பணிக்கு ஒரு கோடி நிதயுதவி!! -ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யாவின் மனிதாவிமானம்-
தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியத்திற்கு நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஒரு கோடி ரூபாய் நிதயுதவி கொடுத்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்றை எதிர்கொள்வதற்காக தாராளமாக நிதி அளிக்கலாம் என்று கொடையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் இருவரும், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிக்காக ஒரு கோடி ரூபாயை கையளித்துள்ளார்.