“தல தலதான்” -கொரோனா தடுப்பு பணிக்காக அஜித் 25 இலட்சம் நிதியுதவி-
கொரோனா தொற்றை எதிர்கொள்ள தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியத்திற்க நடிகர் அஜித் 25 இலட்சம் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சர் பொது நிவாரண நிதியத்திற்க நன்கொடை வழங்குங்கள் என்று தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து நடிகர் சிவக்குமார், தனது குடும்பத்தினர் சார்பாக ஒலு கோடி ரூபா நிதியுதவி வழங்கினார். அதேபோல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலா 25 இலட்சம் வழங்கி இருந்தனர்.
மேலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், தற்போது 25 இலட்சம் ரூபாய் கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கி உள்ளார். முதலில் அவர் 2.5 கோடி வழங்கியதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அஜித் 25 இலட்சம் கொடுத்ததாக அவரது செய்தித் தொடர்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.