SuperTopAds

முழுமையாக தடுப்பூசி போட்டால் மாஸ்க், சமூக இடைவெளி தேவையில்லை!! -அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
முழுமையாக தடுப்பூசி போட்டால் மாஸ்க், சமூக இடைவெளி தேவையில்லை!! -அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவிப்பு-

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அந்நாட்டு நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனால் அண்மைக்காலமாக அந்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.

கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.

இருப்பினும் ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு இருக்கும் பட்சத்தில் அந்த உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.