சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றுவதற்கு சதி..! வரலாறு தொியாமல் உயர் அரச அதிகாரிகள் சிலர் குத்தி முறிவதாக தகவல்..

ஆசிரியர் - Editor I
சங்குப்பிட்டி பிள்ளையாரை அகற்றுவதற்கு சதி..! வரலாறு தொியாமல் உயர் அரச அதிகாரிகள் சிலர் குத்தி முறிவதாக தகவல்..

பூநகரி - சங்குப்பிட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பிள்ளையார் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு உயர் அரச அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. 

சங்குப்பிட்டி பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிள்ளையார் ஆலயம் ஒன்று இருந்ததாகவும் பின்னர் போர் காரணமாக குறித்த ஆலயம் அழிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் சைவ சமய அமைப்புக்களால் 

பிள்ளையார் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உயர் அரச அதிகாரிகள் குறித்த பிள்ளையார் சிலையை அகற்றியே ஆகவேண்டும். என குத்தி முறியதாவ தகவல் கிடைத்துள்ளது. 

குறிப்பாக பூநகரி பிரதேச செயலக அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் தாங்க முடியாத அழுத்தம் காரணமாக பிள்ளையார் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு முஸ்தீபு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. 

முன்னரும் குறித்த பகுதியில் பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டிருந்த நிலையில் இனந்தொியாத நபர்களினால் சிலை அகற்றப்பட்டு வேறு ஒரு இடத்தில் வீசப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், 

அரச அதிகாரிகள் குறித்த பிள்ளையார் சிலையை அகற்ற பிரயத்தனம் எடுப்பதற்கு பின்னால் உள்ள காரணத்தை அறிய முடியவில்லை. எனினும் பிரதேச செயலகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தரப்புக்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. 

இந்நிலையில் அரசியல் தரப்புக்கள் இந்த விடயத்தில் தலையீடு செய்யது பிள்ளையார் சிலையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு