கங்கையில் மிதந்து வரும் கொரோனா சடலங்கள்!!
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பல உடல்கள் கங்கை நதியில் மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு உத்தரபிரதேச எல்லையில் உள்ள பீகாரின் பக்சர் மாவட்டத்தில் இருக்கும் சவுசா கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டியபடி பல்வேறு உடல்கள் மிதந்து வந்தன.
சுமார் 30 முதல் 40 உடல்கள் மிதந்து வந்ததை பார்த்தாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அத்துடன் அந்த உடல்கள் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.