SuperTopAds

கொரோனா ஊரடங்கால் ஏறிய கடன் சுமை!! -ஒரு குடும்பமே விசம் அருந்தி தற்கொலை-

ஆசிரியர் - Editor II
கொரோனா ஊரடங்கால் ஏறிய கடன் சுமை!! -ஒரு குடும்பமே விசம் அருந்தி தற்கொலை-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறித்த பகுதியிசைச் சேர்ந்த சரவணன் (வயது 35) என்பவர் அங்குள்ள நகைகடை பஜார் தெருவில் சொந்தமாக நகைபட்டறை வைத்து தொழில் செய்து வந்தார். 

அவர் பூங்கோதை (வயது 24) என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். இவர்களுககு 3 குழந்தைகள் உள்ளனர்.

சர்வணன் தந்து நகை பட்டறை தொழிலை விரிவுபடுத்துவதற்காக சிலரிடம் அதிக வட்டிக்கௌ கடன் வாங்கியுள்ளார். தொழிலில் பெரும் நஸ்டம் ஏற்பட்டு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமல் சரவணன் தவித்து வந்தார். 

கடந்த வருடம் கொரோனா முழு ஊரடங்கின் போது பெரும் கடன் சுமைக்கு ஆளானார். கடன் கொடுத்தவர்களும் வட்டியுடன் சேர்த்து அசலும் தரவேண்டுமென நெருக்கடி கொடுத்துள்ளனர். 

இதனால் மனமுடைந்த சரவணன் மற்றும் மனைவி விஜி ஆகிய இருவரும் தனது இரு மகள்களுக்கும், ஒரு மகனுக்கும் நகையை சுத்தப்படுத்தும் கெமிக்கல் மருந்தை கொடுத்து கொலை செய்து தாங்களும் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.