யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை தினசரி இரு தடவைகள் நடத்த தீர்மானம்..!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா பரவல் அபாயம் தொடரும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை தினசரி இரு தடவைகள் நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியிருக்கின்றார். இந்நடவடிக்கை நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் பணிப்பாளர் கூறியிருக்கின்றார்.
இதன் அடிப்படையில் நாளாந்தம் பகல் ஒரு சுற்றாகவும் இரவு மற்றொரு சுற்றாகவும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை,வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில்
கொரோனா நோயாளர்களை பராமரிக்கும் செயற்பாடு நாளை முதல் முன்னெடுக்கப்படும் என்றும் இன்று மருத்துவர்கள் குழு வைத்தியசாலையைப் பார்வையிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.