SuperTopAds

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!! -பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு-

ஆசிரியர் - Editor II
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!! -பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு-

எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அ.தி.மு.க வின் ருவிட்டர் பக்கத்தில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை அடுத்து, 65 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க., சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுகிறது.

இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த 7 ஆம் திகதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதில் காரசார விவாதம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே நேரடி கருத்து மோதலும் ஏற்பட்டு எதிர்க்கட்சி தலைவர் யார்? என்பதை முடிவு செய்ய முடியாமல் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிந்தது.

இதையடுத்து  திட்டமிட்டபடி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடந்தது. 

3 மணி நேரமாக நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.